திவ்யா: மிகவும் மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறேன்

1 mins read
18adc8b8-cfd0-4216-bd97-2275cb7efdf6
திவ்யா துரைசாமி. - படம்: ஊடகம்

‘மாமன்னன்’ படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‘வாழை’ படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார் திவ்யா துரைசாமி.

“ஒரு மாறுபட்ட உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தும் வேடத்தில் நடித்துள்ளேன். இப்படம் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும்,” என்கிறார் திவ்யா.

சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமான இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சில விவகாரங்கள் தொடர்பான தனது கருத்துகளையும் வெளியிடுவது வழக்கம்.

“பிரியா பவானி சங்கரைப் போன்று சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் திவ்யா துரைசாமி. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் இவர் அறிமுகமானார்.

பின்னர் சுசீந்திரன் இயக்கிய ‘குற்றம் குற்றமே’ என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாகவும் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்திருந்தார் திவ்யா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்