‘தி ஐ’ என்ற தலைப்பில் உருவாகும் ஆங்கிலப் படம் தமது திரைப் பயணத்தில் மிக முக்கியமான படைப்பு என்று ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
‘தி லாஸ்ட் கிங்டம்’ படத்தில் நடித்த மார்க் ரோலே நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் கதை கடந்த 1980ஆம் ஆண்டில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சுவரொட்டியை தற்போது வெளியிட்டுள்ளார் ஷ்ருதி.
டாப்னி ஸமான் (Daphne Schmon) இயக்கிய இந்தப் படம் கிரேக்க அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
லண்டன் திரைப்பட விழாவில் சிறந்தப் படத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஷ்ருதி தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது
தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘சலார்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஷ்ருதி.