இந்தியா உட்பட உலகம் முழுவதும் இறைச்சிக்காக விலங்குகள் துன்புறுத்தப்படுவது வேதனை அளிப்பதாகச் சொல்கிறார் நடிகை வேதிகா.
தமது சமூக ஊடகப் பக்கத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படுவது தொடர்பான காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், அந்த விலங்குகளுக்கு மனிதர்களை விட மரணம் கனிவானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் படுகொலையின் ஒரு பகுதியாக நீங்கள் இன்னும் இருக்க விரும்புகிறீர்களா? விலங்குகளைக் கொல்வதற்கு நிதி வழங்குவதை உடனடியாக நிறுத்துங்கள். வன்முறையில்லாத சைவத்தைத் தேர்வு செய்யுங்கள்,” என்று தமது பதிவில் வேதிகா தெரிவித்துள்ளார்.
‘மதராஸி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ‘முனி’, ‘சக்கரகட்டி’, ‘காளை’, ‘காஞ்சனா 3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


