சித்தார்த்தை வாழ்த்திய சிம்பு

1 mins read
7e0b802e-57db-447a-8371-64e69fba9370
படம்: - தமிழக ஊடகம்

நடிகர் சித்தார்த், தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’.

‘சித்தா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

கதையின் நாயகன் சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பு பற்றிய கதைக்களம் தான் சித்தா.

இந்நிலையில், ‘சித்தா’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் சிம்பு தனது சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “சித்தா மிகவும் உணர்திறன் மிக்க விஷயம், மிக இலகுவான முறையில் மிகவும் தெளிவுடன் கையாளப்பட்டுள்ளது. இயக்குநர் அருண் குமாருக்கு வாழ்த்துகள். சித்தார்த் இந்த திரைக்கதையை தேர்ந்தெடுத்து தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நடிகர் கமல் ஹாசனும் ‘சித்தா’ திரைப்படத்தைப், பாராட்டி சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

‘சித்தா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம், குறிப்பாக சிறுவர் சிறுமியர், பெற்றோர் பார்க்க வேண்டிய படம் என்று சித்தார்த்தும் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்