ஒரு படத்தின் கதைக்கு ஏற்கெனவே தனது ஊதியத்தை நிர்ணயிப்பதாகச் சொல்கிறார் நடிகை டாப்சி.
அண்மையில் ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், ஏன் முன்புபோல், தமிழிலும் தெலுங்கிலும் நடிப்பதில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு நல்ல கதைகள் அமையவில்லை என்று பதிலளித்தார் டாப்சி.
“பிரம்மாண்டப் படைப்புகளில் நடிப்பதைவிட, குறைந்த செலவில் உருவாகும் படங்களையே விரும்புகிறேன். ஏனெனில், அதுதான் எனக்கு அதிக சுதந்திரத்தையும் மனநிறைவையும் தருகிறது. எனக்குப் பிரம்மாண்டம் வேண்டாம். மனதுக்குப் பிடித்தமான கதைகள்தான் வேண்டும்.
“அதனால்தான் படத்துக்கு ஏற்ப என் ஊதியத்தை தீர்மானிக்கிறேன். நல்ல கதைகளின் தன்மைக்கேற்ப சம்பளத்தைக் குறைத்துக்கொண்டே போவேன்,” என்கிறார் டாப்சி.