தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட்: நேரில் கண்டுரசிக்கத் தயாராகும் அமிதாப் பச்சன், ரஜினி

1 mins read
b440094c-6027-497a-a763-d8f9776b4162
ரஜினியுடன் அமிதாப் பச்சன். - படம்: ஊடகம்

கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உள்ள நடிகர்களில் அமிதாப் பச்சனுக்கும் ரஜினிக்கும் தயக்கமின்றி முதலிடம் தரலாம். இருவருமே இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் தீவிர ரசிகர்கள்.

இந்நிலையில், மூட நம்பிக்கை காரணமாக கிரிக்கெட் ஆட்டங்களைக் காண தாம் போட்டி நடக்கும் திடலுக்கு நேரில் செல்வதில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அமிதாப்.

சில போட்டிகளை நேரில் கண்டு ரசித்தபோது, இந்திய அணி தோற்றுப் போனதாம்.

“முன்பெல்லாம் இந்தியா விளையாடும் போட்டி எதுவாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். அந்தப் போட்டிகளை நேரில் சென்று பார்க்க எனக்கும் ஆசைதான்.

“ஆனால் நேரில் சென்றால் எனக்குப் பிடித்த அணி தோற்றுவிடுகிறது. சிலமுறை அப்படி நடந்ததால் இனி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்,” என்று சொல்லும் அமிதாப், ரஜினியின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் தொடங்கியுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை நேரில் காண அமிதாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளாராம் ரஜினி. இரு தீவிர ரசிகர்களும் முக்கியமான போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்