அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஸர்பைஜார் நாட்டில் தொடங்கியுள்ளது. மூன்று வாரங்கள் அங்கு தங்கியிருந்து காட்சிகளைப் படமாக்க உள்ளனர்.
அஜித், பட நாயகி திரிஷா இடையேயான பாடல், காதல் காட்சிகளை முதலில் படமாக்கி வருகின்றனர் என்றும் அடுத்து சண்டைக் காட்சிகள் எடுக்கப்படும் என்றும் படக்குழு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஏற்கெனவே அஸர்பைஜான் சென்று சண்டைக் காட்சிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை திரும்பிய பிறகும் இரண்டு சண்டைக் காட்சிகளைப் படமாக்க உள்ளனராம்.
இந்தப் படத்துக்காக ‘பைக் துரத்தல்’ காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்க இருப்பதாகத் தகவல். அதைத் திட்டமிட்டு அருமையாகப் படமாக்க வேண்டும் என்று இயக்குநரிடம் அஜித் கூறியுள்ளாராம்.

