டோனி, ராம் சரண் கூட்டணி

1 mins read
ed015d68-1b4e-442b-bc2a-76f2ad543004
டோனியுடன் ராம் சரண். - படம்: ஊடகம்

தெலுங்கு நடிகர் ராம்சரணும் கிரிக்கெட் வீரர் டோனியும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, டோனி தயாரிக்கும் திரைப்படத்தில் ராம்சரண் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக அண்மையில் மும்பை சென்றிருந்தார் ராம் சரண். அப்போது டோனியை சந்தித்துள்ளார்.

அப்போது, சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கேட்டறிந்த டோனி, அவரது நடிப்பைப் பாராட்டினாராம்.

“இதையடுத்து தெலுங்கில் ஒரு படம் தயாரிப்பது குறித்து ராம் சரண் உடன் கலந்துரையாடினார் டோனி. முதற்கட்ட பேச்சுவார்த்தை நல்லவிதமாக முடிந்துள்ளது.

“மிக விரைவில் டோனி தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும்,” என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.

இந்தியில் டோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ராம் சரண், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்