அஜித் படத்தில் கவர்ச்சிக் கதாபாத்திரத்தில் ரெஜினா

1 mins read
43d64dd0-c25f-4f5a-8c75-a2ba10485392
ரெஜினா. - படம்: ஊடகம்

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படம் குறித்து புதுத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக இந்தி நடிகை ஹுமா குரேஷி நடிப்பார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகை ரெஜினா கஸாண்ட்ராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும். சில சிக்கல்களால் இவ்வாரம்தான் தொடங்கியது. எனவே, இப்படத்துக்காக ஹுமா குரேஷி அளித்திருந்த கால்ஷீட் வீணாகிவிட்டதாம்.

இந்நிலையில், அவர் ஏற்கெனவே நடிக்க ஒப்புக்கொண்ட இந்தி இணையத்தொடருக்கான படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டியிருப்பதால், அஜித் படத்திலிருந்து வேறு வழியின்றி அவர் விலகிவிட்டதாகத் தெரிகிறது.

‘கேடி பில்லா’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ள ரெஜினா இப்புதிய படத்தில் கவர்ச்சிகரமான பாத்திரத்தில் நடிக்கிறாராம்.

ஹுமா குரேஷிக்கு இணையாக கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும் என இயக்குநர் தரப்பில் முன்பே கூறப்பட்டதாம். ரெஜினாவும் இதற்கு சம்மதித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்