‘இந்தியன் 2’ படத்தில் நடித்த முடித்த கையோடு தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன்.
அடுத்து, வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் திரிஷா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பது யார் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.

