லோகேஷ் கனகராஜ் பெயரில் பண மோசடி

1 mins read
fd3ffebb-9f48-45fa-81c6-80cc392ac94e
லோகேஷ் கனகராஜ். - படம்: ஊடகம்

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரில் நடக்கும் மோசடியை தெலுங்கு நடிகர் பிரம்மாஜி சுட்டிக்காட்டி உள்ளார்.

இம்மோசடியில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் திரையுலகத்தினருக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

“லோகேஷ் கனகராஜின் மேலாளர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் இளம் நடிகர், நடிகைகளுக்கு குறுந்தகவல் அனுப்புகிறார். கைப்பேசியிலும் பேசுகிறார்.

“லோகேஷின் அடுத்த படத்துக்கு உங்களைப் பரிசீலிக்கிறோம் என்றும் பணம் அனுப்பினால் நடிப்புத் தேர்வுக்கு வரும்போது அணியத் தேவையான ஆடைகளை வாடகைக்கு தருகிறோம் என்று பேசி அவர் பணம் வசூல் செய்கிறார்.

“சினிமாத் துறைக்கு வரவேண்டும் என்ற கனவில் இருக்கும் இளையர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது,” என்று பிரம்மாஜி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்