தாய்மையின் இனிமையை தாம் முழுமையாக அனுபவித்து வருவதாகக் கூறியுள்ளார் நடிகை இலியானா.
‘நண்பன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், திடீரென திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில், ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த இலியானா, தனது தாய்மை அனுபவங்களை சமூக ஊடகம் வழி பகிர்ந்துகொண்டுள்ளார்.
“என் மகன் ஃபீனிக்ஸ் டோலன் பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், அவனது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
“இதனால் என் மனம் துடிதுடித்தது. குழந்தையின் உடல்நிலை குறித்து ஒரு தாய் அனுபவிக்கும் வேதனையை எப்படி தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை யாரும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். எல்லா பெண்களுக்குமே தாயானதும் இயல்பாகவே இவையெல்லாம் தெரிந்து விடுகிறது.
“என் குழந்தை, கணவருடன் மகிகழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கிறேன்,” என்று இலியானா கூறியுள்ளார்.

