தொப்பியுடன் ரஜினி; ஆர்ப்பரித்த ரசிகர்கள்

1 mins read
d265e4b6-973a-488d-83d2-185b88bb8365
ரஜினி. - படம்: ஊடகம்

தலையில் தொப்பி அணிந்தபடி படப்பிடிப்புக்கு வந்த ரஜினியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

புதிய தோற்றத்துடன் ரஜினி வலம் வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ரஜினியின் 170ஆவது படத்தை ‘ஜெய் பீம்’ ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில், நடிகர்கள் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு வரும் ரஜினியைக் காண ரசிகர்கள் குவிந்திருந்தனர். நூற்றுக்கணக்கானோர் தனக்காக காத்திருப்பதைக் கண்ட ரஜினி, காரில் இருந்து இறங்கி, அவர்களை நோக்கி கையசைத்துக் கும்பிட்டார்.

அப்போது அவர் தொப்பியுடன் காணப்பட்டார். அவரது புதிய தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதைக் கைப்பேசியில் படம்பிடித்த பலர், அந்தப் படங்களையும் காணொளிகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்