கார்த்திக்கு ஜோடியாகும் கிரித்தி ஷெட்டி

கார்த்திக்கு ஜோடியாகும் கிரித்தி ஷெட்டி

1 mins read
292fc382-83cd-4090-a34b-6ba0c61ef493
கிரித்தி ஷெட்டி. - படம்: ஊடகம்

கார்த்தியின் 26வது படத்தில் கிரித்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

நலன் குமாரசாமி இயக்கும் பெயிரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐம்பது விழுக்காடு முடிவடைந்துவிட்டது. ஆனால் இப்போதுதான் கதாநாயகி தேர்வாகி உள்ளார்.

இப்படத்தில் சத்யராஜ் வில்லனாக நடிக்கிறார். இருவரும் ஏற்கெனவே, ‘தம்பி’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்புதுப் படத்தில் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடித்துள்ளதாகவும் தகவல்.

இதற்கிடையே ‘ஜிப்சி’ படத்திற்கு பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ வேகமாக வளர்ந்து வருகிறது.

இதில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்