உயரமான காதலனால் சிக்கல்

உயரமான காதலனால் சிக்கல்

1 mins read
f4f097fd-ebfa-4e63-9eaa-9c28e93281e9
கௌரி கிஷன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘96’ படத்துக்குப் பிறகு கௌரி கிஷன் தமிழில் நடித்த ‘அடியே’ படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், மலையாளத்தில் நடித்துள்ள ‘லிட்டில் மிஸ் ராவுத்தர்’ என்ற படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கிறாராம் கௌரி.

இந்தப் படத்தை விஷ்ணு தேவ் என்பவர் இயக்கியுள்ளார். கதை எழுதி நாயகனாகவும் நடித்துள்ளார் செர்ஷா ஷெரீப்.

சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் 6.2 அடி உயரமுள்ள கதாநாயகனுக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஐந்தடி உயரம் உள்ள கதாநாயகிக்கும் இடையே ஏற்படும் காதலும் அது சார்ந்த பிரச்சினைகளும்தான் கதை.

அக்டோபர் 6ஆம் தேதியே வெளியாக வேண்டிய இப்படம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்