மணலில் புதைந்து கிடக்கும் தமன்னா

1 mins read
11d2c3cb-c407-4d1d-999c-2b29bcb878f4
தமன்னா. - படம்: ஊடகம்

கடற்கரைப் பகுதியில் மண்ணுக்குள் புதைந்தபடி காணப்படும் புகைப்படம் ஒன்றை அண்மையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.

இவ்வாறு மண்ணில் சில நிமிடங்கள் புதைந்து கிடப்பது உடல் இளைக்க உதவும் என்று ஒரு தரப்பினர் நம்புகின்றனர். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனினும் தமன்னா, எந்தக் காரணத்துக்காக மணலில் புதைந்து கிடந்தார் என்பது தெரியவில்லை.

அண்மையில் இவரது நடிப்பில் ‘போலா சங்கர்’, ‘ஜெயிலர்’, ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா சற்றே உடல் பெருத்து காணப்படுவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டதை அடுத்து, தீவிர உடற்பயிற்சியின் மூலம் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

குறிப்புச் சொற்கள்