சென்னை: தமிழகத்தில் 286 கோவில்கள் புனரமைக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், இந்தப் பணிக்காக இதுவரை ரூ.600 கோடி வரை நன்கொடை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்று பெறப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதால்தான் ஏராளமானோர் கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை அளிக்கத் தொடங்கி உள்ளனர்,” என்றார் அமைச்சர் சேகர்பாபு.