நடிகர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஸர்பைஜான் நாட்டிற்குச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகர்களைப்போல அஜித் தஞ்சைப் பெரிய கோவில் அருகில் அரசர் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அந்தப் புகைப்படத்தையும் அவரின் வேடத்தையும் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். அரசர் வேடம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும் விரைவில் இதுபோன்ற ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

