ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் படத்தில் வில்லியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இந்தப் படத்தில் முதலில் வில்லியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை அணுகினர். ஆனால் அவர் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முன்வரவில்லை.
ராஜமவுலி இயக்கிய ‘மகதீரா’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான காஜல் அகர்வால் மீண்டும் அவரது இயக்கத்தில் வில்லியாக நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே ‘பாகுபலி’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியை ராஜமவுலி அணுகினார். அவர் மறுத்ததால் ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
அதுபோன்று இப்போது ஐஸ்வர்யாராய் மறுத்த கதாபாத்திரம் காஜல் அகர்வாலுக்கு வந்துள்ளது.
இதில் அவர் தன் திறமையைக் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

