இன்று தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று வெற்றிகண்டு வருகின்றார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவராகவும் இருக்கின்றார் தனுஷ். கடந்தாண்டு தனுஷிற்கு திரைத்துறையை பொறுத்தவரை சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.
‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து உயரத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார். தனுஷ். தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர் என்ற பிரம்மாண்டமான படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்போது படத்தின் கன்னட வெளியீட்டு உரிமையை பிரபல வெளியீட்டு நிறுவனமான கே ஆர் ஜி பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அடுத்து தன்னுடைய 50வது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றது. இந்நிலையில் தனுஷ் இன்று பல மொழிகளில் சரளமாக பேசி வருகின்றார்.
குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக பேசுகின்றார் தனுஷ். ஆனால் அவர் நடிக்க வந்த புதிதில் தனுஷால் அந்த அளவிற்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியாது.
மேலும் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு தனுஷ் நடிக்க வந்ததால் அவரால் படிப்பை தொடரமுடியாமல் போனது.
எனவே தனுஷ் தன்னால் பட்டப்படிப்பு படிக்க முடியவில்லை என பல நாள் நினைத்து வருந்தியுள்ளாராம். நட்சத்திர ஹோட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் என செல்லும்போது பலர் ஆங்கிலத்தில் பேசுவார்களாம். ஆனால் தனுஷால் ஆங்கிலத்தில் பேசமுடியாமல் கலங்கி நிற்பாராம்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அவர் படிக்கவில்லை என ஒரு சிலர் கேலி செய்வார்களாம். இதனை தனுஷ் பல பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் ரசிகர்களிடம் தயவுசெய்து குறைந்தது ஒரு டிகிரியாவது படிச்சிடுங்க என பல பேட்டிகளில் கூறியுள்ளார். இதைப்போல தனுஷ் ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் கலந்துரையாடுவார். அப்போது அவர் பேசும்போது, படங்களில் ஹீரோக்கள் சிலர் படிக்காமல் இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் படித்தால் தான் ஹீரோ என்று அறிவுரையும் கூறி சிறுவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை உண்டாக்கும் அளவில் பேசி வருகிறார்.