ராஜாவாக வாழும் ராஜமவுலி

2 mins read
c7ab31e6-2cb4-45f0-97ad-9173c0df0b54
இயக்குநர் ராஜமவுலி - படம்: தமிழக ஊடகம்

நம்ம ஊர் பிரம்மாண்ட இயக்குநர் சங்கரை ஓரங்கட்டி பிரம்மாண்டத்தின் உச்சத்தைக் காட்டிய ராஜமவுலி நேற்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். ‘பாகுபலி’ என்ற படைப்பின் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த இவர் ‘ஆர்ஆர்ஆர்’ மூலம் ஆஸ்கர் வரை சென்றார்.

இவர் 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் படங்களை இயக்கி இருந்தாலும் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி பெற்றன.

அதனாலேயே அவருடைய படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கக்கூடிய இயக்குநராகவும் இவர் இருந்து வருகிறார். அந்த வகையில் ஒரு படத்திற்காக இவர் தற்போது ஐம்பதிலிருந்து 60 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் இவருடைய சொத்து மதிப்பானது ரூ.160 கோடியாக இருக்கிறது. அதில் ஹைதராபாத்தின் முக்கிய பகுதியில் இவருக்கு பிரம்மாண்ட பங்களாவும் இருக்கிறது. அதன் மதிப்பு மட்டுமே பல கோடியை தாண்டும். இது தவிர அழகிய பண்ணை வீடும் இருக்கிறது

அதில் தான் இவர் அதிக நேரம் செலவிடுவாராம். அதைத் தொடர்ந்து இவரிடம் 1.5 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ரேஞ்ச் ரோவர், வால்வோ எக்ஸ்சி உள்ளிட்ட உயர் ரகமான கார்களும் இருக்கின்றன. இதன் மதிப்பு மட்டுமே ஐந்து கோடி ரூபாயைத் தாண்டுமாம்.

இது தவிர இவர் தன்னுடைய பணத்தை பல தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறார். இப்படி ராஜா போன்று வாழ்ந்து வரும் இவர் அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து தன்னுடைய கனவு படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி