தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூரியின் உயர்வைப் பார்த்து வியக்கும் கோலிவுட்

1 mins read
3fc30ca5-6a69-4971-a9ac-3228e6dd3826
சூரி - படம்: ஊடகம்

‘விடுதலை’ படத்திற்குப் பிறகு சூரியின் மார்க்கெட் அதிரடி உயர்வு.

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’ ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்தார் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் துரை செந்தில்குமார்.

இவர் தற்பொழுது சூரி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கருடன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

மேலும் சூரியுடன் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தற்பொழுது தேனியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படம் ரூ.40 கோடியில் தயாராவதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து அவரின் மார்க்கெட் இவ்வளவு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்