ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், தற்போது நடிகர் அதர்வாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை எடுக்கவுள்ளார்.
அண்மையில் அதர்வா நடித்து வெளிவந்த குருதி ஆட்டம், பட்டத்து அரசன் ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன.
தற்போது நிறங்கள் மூன்று, தணல் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதர்வா, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இப்படத்திற்கு ‘டி.என்.ஏ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
குற்றம், அதிரடி பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கியுள்ளதாக சினிமா வாட்டாரங்கள் கூறுகின்றன.
‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
படம் தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.
நடிகர் அதர்வாவுக்கு இது முக்கியமான படமாக உள்ளது. இப்படத்தின் வெற்றியை வைத்து தான் திரையுலகில் அவருக்கான இடத்தை பிடிக்க முடியும் என்று சினிமா கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பானா காத்தாடி படம் மூலம் அதர்வா திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அதன்பின்னர் அதர்வாவின் திரை வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவே உள்ளது.