அழகை வைத்து மட்டும் வெல்ல முடியாது: நயன்தாரா

2 mins read
8fa31d15-cdf4-477b-8953-178fb80abbf8
படம்: - ஊடகம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் மிக முக்கியமானவர் நயன்தாரா.

ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

அட்லி இயக்கிய இந்த படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

ஜவான் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும், திரையரங்குகளில் அது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது,

மேலும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.1,110 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தி சினிமாவில் நயன்தாரா அறிமுகமான முதல் படமே பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில், நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தென்னிந்தியத் திரைப்படத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நட்சத்திரமாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.

சினிமாவில் அறிமுகமான தொடக்கத்தில், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

தனக்கு எந்த கதாபாத்திரம் சரியாக வரும் என்று தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, நடிகைகளின் முகத்திற்காக மட்டும் படம் வெற்றி பெறுவதில்லை என்று கூறியுள்ளார்.

“சினிமாவில் எனது ரசிகர்களும் அவர்கள் எனக்கு அளித்த பதவியும், மதிப்பிற்குரிய திரைப்பட தயாரிப்பாளர்கள், அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்களிடம் நான் பெற்ற மரியாதையும் எனது மிகப்பெரிய சாதனையாகும்.”

“நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி,” என்று அண்மையில் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

“ நடிகர் நடிகைகளின் முகத்தை வைத்து மதிப்பிடுவதற்கு பதிலாக, பெண்கள் ஆழமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள்.”

“மக்கள் என்னை ஏற்றுக்கொள்வதற்கும் நேசிப்பதற்கும் நான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

“வாழ்க்கையை சமநிலைப்படுத்தும் கலையை மெருகேற்றிய வல்லமைமிக்க பெண்கள் என்னை சுற்றி இருக்கிறார்கள். பெண்களாகிய, நம் வாழ்வில் சமநிலையை ஏற்படுத்துவது இயற்கையானது.

“நாம் பல பணிகளில் தேர்ச்சி பெற்றவர்கள், முன்னுரிமை சிந்தனையுடன் எப்போதும் சீராக இருக்க வேண்டும்” என்றும் நயன்தாரா கூறியுள்ளார்.

நயன்தாரா கடைசியாக குற்றப்பின்னணி கொண்ட இறைவன் திரைப்படத்தில் நடித்தார்.

அவர் தற்போது அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவின் நயன்தாரா 75 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் நடிக்கிறார்கள்.

மேலும் தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்தின் இயக்கத்தில் தி டெஸ்ட் படத்தில், மாதவன், சித்தார்த் ஆகியோருடனும் நயன்தாரா நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்