ரகுல்: நாடகத்தன்மை கூடாது

ரகுல்: நாடகத்தன்மை கூடாது

1 mins read
36631a9f-91c5-4620-a6fb-09176ceb718b
ரகுல் பிரீத் சிங். - படம்: ஊடகம்

உண்மையான காதலில் நாடகத்தன்மைக்கு இடமில்லை என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

காதலிப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எத்தகைய நிபந்தனையும் விதிக்காமல், ஒருவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடையூறு செய்யாமல் காதலை கௌரவிக்க வேண்டும்.

“ஒரு கருத்தைத் திணிப்பது கூடாது. கருத்து வேறுபாடுகளுக்கு இடம் அளிக்காமல் இணைந்து முன்னேற்றம் காண்பதுதான் உண்மையான காதல்,” என்றும் ரகுல் கூறியுள்ளார்.

தனது திருமணம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள ரகுல், மேலும் சில காலம் திரையுலகில் கவனம் செலுத்த விரும்புகிறாராம்.

குறிப்புச் சொற்கள்