‘விடாமுயற்சி’ படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதிக், அண்மையில் விஷால் நடித்து வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியுள்ளார்.
இதையடுத்து, அஜித்தின் 64வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் புதுத்தகவல் வெளியாகி உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ படம் வெளியாகி எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இப்போதுதான் அடுத்த படமான ‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
அஸர்பைஜானில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி, நாயகி திரிஷா, ரெஜினா, இந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

