பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மனநலனைப் பாதுகாப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஷ்ருதி ஹாசன்.
தனது மனநலனை பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மனநலம் குறித்து பேச யாரும் தயங்க வேண்டாம் என்றும் ஒட்டுமொத்த உடல்நலன் சிறப்பாக இருக்க வேண்டுமானால் மனநலத்தைப் பேணுவது முக்கியமானது என்றும் அவர் அண்மைய காணொளிப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு மன நல பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்த ஷ்ருதி, மன அழுத்தத்தை எதிர்த்து போராடுவதும் அதைச் சரி செய்வதும் எளிதல்ல என்று கூறியிருந்தார்.
“எனது கவலையையும் அதற்கான காரணத்தையும் தினமும் அளவிடுகிறேன். இதற்காக ஒரு டைரி வைத்து அதில் குறிப்புகளை எழுதுகிறேன்.
இரண்டாவதாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன். நாள்தோறும் என்னைச் சுற்றி நடப்பவை குறித்து மனதுக்குள் அசைபோடுகிறேன். நான்காவதாக, பிடித்தமானவர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொள்கிறேன். இதன் மூலம் நமக்கு எதிரே இருப்பவரின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட இயலும்.
“ஐந்தாவதாக சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் கருத்துகள் என்னை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து நானே ஆய்வு செய்வேன். இவைதான் எனது மனநலனைப் பாதுகாக்க கைகொடுகின்றன,” என்கிறார் ஷ்ருதி ஹாசன்.

