கதாசிரியராக மாறிய யோகி பாபு

1 mins read
d98cedd2-c80f-4130-a15f-2a279cea9b60
யோகி பாபுவுடன் ஜி.வி.பிரகாஷ். - படம்: ஊடகம்

நடிகர் யோகி பாபு திடீரென கதாசிரியராக மாறியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்துக்கான கதையை முழு முனைப்புடன் எழுதி வருவதாக அவர் கூறியுள்ளார்.

“நீங்கள் (ஜி.வி. பிரகாஷ்) சொந்தமாகத் தயாரிக்கும் படம் வெற்றிபெற வாழ்த்துகள். இந்தப் படம் மறக்க முடியாத படைப்பாக அமைய நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

“அடுத்து நீங்கள் நாயகனாகவும் நானும் முக்கிய வேடத்திலும் நடிக்கும் படத்துக்கு ஒரு கதாசிரியராக கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தப் படமும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,” என்று யோகி பாபு மேலும் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

‘கிங்ஸ்டன்’ என்ற புதுப்படத்தில் ஜி.வி.யும் யோகி பாபுவும் இணைந்து நடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்