தமன்னா: எனது எல்லை எது என்று எனக்குத் தெரியும்

1 mins read
b90925cd-0359-4ba6-bf06-24126888d294
தமன்னா. - படம்: ஊடகம்

திரையுலகில் தமக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளார் தமன்னா.

தாம் நாள்தோறும் பதினெட்டு மணி நேரம் உழைப்பதாகவும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கு முன்பு இந்த அளவுக்கு நான் உழைத்ததில்லை. மேலும், எனது எல்லை எது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

“நான் அணியும் உடைகள் கவர்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கதைக்கும் கதாபாத்திரத்தின் தேவைக்கும் ஏற்பவே உடைகளை தேர்வு செய்கிறேன்.

“அரைகுறை அறிவோடு பலர் என்னிடம் கேள்விகளை எழுப்புகிறார்கள். அவர்களுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை,” என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எனக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது திருமணம் செய்வேன்,” என்றும் தமன்னா பதிலளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்