நடிகர் சூர்யா இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் கல்லூரி மாணவனாக நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தை முடித்த பிறகு மீண்டும் சுதா கொங்கரா உடன் இணைந்து நடிக்க உள்ளார் நடிகர் சூர்யா.
தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பெயர்பெற்றிருப்பவர் சுதா கொங்கரா. மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று ஆகிய இரு திரைப்படங்களும் சுதா கொங்கராவின் மாஸ்டர் பீஸ் என்றே கூறலாம். மீண்டும் நடிகர் சூர்யாவுடன் சுதா கொங்கரா இணைய உள்ளார். சூர்யாவின் 43வது படமாக இது உருவாக உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யா மீண்டும் ஒரு கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாகவும் அதற்காக பெரிய அளவில் உடல் எடையை குறைக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்தத் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

