மம்முட்டி - ஜோதிகா நடித்திருக்கும் காதல் படம்

மம்முட்டி - ஜோதிகா நடித்திருக்கும் காதல் படம்

1 mins read
0fe8fc01-76d0-4df1-9ae7-e8bedd5d22a7
 ‘காதல் - தி கோர்’ படத்தில் ஜோதிகா, மம்முட்டி - ஊடகம்

மம்முட்டியும் ஜோதிகாவும் நடித்திருக்கும் படம் நவம்பர் மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

மம்முட்டி நடிப்பில் அண்மையில் வெளியான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் வெற்றியைப் பெற்று கிட்டத்தட்ட ரூ.70 கோடி வசூலை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் மம்முட்டி அதிரடி காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘காதல் - தி கோர்’.

இந்தப் படத்தின் தலைப்பு காதல் என்று இருந்தாலும் இதில் மம்முட்டி ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா. மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை.

அதுமட்டுமல்லாமல் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபிதான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் படம் வெளியாகும் தேதி குறித்து விவரம் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் வரும் நவம்பர் மாத இறுதியில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி