‘கேப்டன் மில்லரி’ல் அதிதி பாலன்

1 mins read
dacdf036-1cc8-4659-ba15-77fbc914e5e0
அதிதி பாலன். - படம்: ஊடகம்

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் மற்றொரு நாயகி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா, ஜான் கொக்கென் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ‘அருவி’ அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரின் காட்சிகள் சுதந்திரத்துக்கு முந்தைய கதையில் வருகிறது என்றும் ‘கேப்டன் மில்லர்’ இரண்டாம் பாகம் உருவானால் அதில் இவரது பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்