தீபாவளி போட்டியில் மூன்று படங்கள்

தீபாவளி போட்டியில் மூன்று படங்கள்

2 mins read
30bf2997-91f9-4021-8ca2-9a0e2b91c738
கார்த்தி. - ஊடகம்

இந்த தீபாவளிக்கு மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்த தீபாவளி பண்டிகையில் கார்த்தியின் ‘ஜப்பான்’, லாரன்சின் ‘ஜிகர்தண்டா 2’, விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ ஆகிய 3 படங்கள் மோதத் தயாராகி உள்ளது.

முன்பு கார்த்தி, லாரன்ஸ் படங்கள் மட்டும் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது விக்ரமின் ‘ரெய்டு’ படமும் இணைந்து இருக்கிறது.

‘ஜப்பான்’ படத்தை ராஜுமுருகன் இயக்கி உள்ளார். இவர் தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தை இயக்கி பிரபலமானவர். இது கார்த்திக்கு 25வது படமாகும். நாயகியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

“இளைஞர்கள் போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும்,” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் கார்த்தி.

அப்போது ‘கார்த்தி 25’ என்ற விழாவும் நடத்தப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா ‘2 உருவாகி உள்ளன.

இதில் லாரன்சுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்தப்படம் அதிரடி சண்டை படமாக உருவாகி உள்ளது.

விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் உருவான ‘தகறு’ என்ற படத்தின் தமிழ் மறுபதிப்பாகத் தயாராகி உள்ளது. கார்த்தி இயக்கி உள்ளார்.

தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்த விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் நவம்பர் இறுதிக்குத் தள்ளிப் போய் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி