பிரபுவைப்போல பேசி, வந்தவர்களை மகிழ்வித்த ஜெயராம்

பிரபுவைப்போல பேசி, வந்தவர்களை மகிழ்வித்த ஜெயராம்

1 mins read
5dc136bc-b58b-4c19-9241-00fc4251d8cb
ஜெயராம் - ஊடகம்

கன்னட படமான ‘கோஸ்ட்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வின்போது ஜெயராம் பிரபுவைப்போல பேசி வந்திருந்த பிரபலங்களை ஆச்சரியத்தில் அசத்தினார்.

நடிகர் ஜெயராம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். இந்நிலையில் முதன் முதலாக கன்னடத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார் ஜெயராம்.

சிவராஜ்குமார் நடித்துள்ள ‘கோஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக கன்னடத்தில் தானே குரல் பதிவும் செய்துள்ளார்.

‘பான்’ இந்தியா படமாக வெளியாகும் ‘கோஸ்ட்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் ஜெயராமிடம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம் நடிகர் பிரபு ஆகியவர்களைப்போல பேசியதை நினைவுபடுத்திய செய்தியாளர், அதைப்போல இந்த நிகழ்விலும் செய்து காட்ட முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

முதலில் யோசித்த ஜெயராம் பின்னர், பிரபுவைப்போல பேசி, நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்