டிசம்பரில் ‘ஹாய் நான்னா’ வெளியீடு காண்கிறது

1 mins read
7602f70b-1ef0-49a3-b952-033793a3f490
மிருணாள் தாகூர், நானி - ஊடகம்

நானி நடித்திருக்கும் ‘ஹாய் நான்னா’ படம் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் நானி தற்போது புதுமுக இயக்குநர் சவுரியா இயக்கத்தில் ‘ஹாய் நான்னா’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் மிருணாள் தாகூர், ஜெய்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிர்தயம் பட இசையமைப்பாளர் ஏசம் அப்துல் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று இதன் டீசர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆண்டு டிசம்பர் 21 இப்படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், இப்போது இப்படம் டிசம்பர் 7 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்