தன்னைத் திருமணம் செய்ததுபோல் படத்தை மாற்றி அமைத்த ரசிகரைப் பாராட்டிய சமந்தா.
தமிழ், தெலுங்கு படங்கள் தவிர இந்தி இணையத் தொடர்களிலும் நடித்துள்ள சமந்தா, விஜயதேவர கொண்டாவுடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு இன்னும் புதிய படம் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
மேலும் குஷி படத்திற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட மயோசிட்டீஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் செய்தி வெளியிட்டார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தாவிடம், “ரசிகர் ஒருவர் உங்களைத் திருமணம் செய்தது போல ஒரு புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து வெளியிட்டு உள்ளாரே. அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
சமந்தா அந்தப் படத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, “நிறைய நேரம் செலவு செய்து என்னுடைய படத்துடன் அவரது புகைப்படத்தையும் இணைத்து உள்ளார். திறமைவாய்ந்த அந்த ரசிகரின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்,” என்று கூறியிருக்கிறார்.

