லோகேஷ்: ஆரம்பக் காட்சிகளை விட்டுவிடாதீர்கள்

1 mins read
f3874d6c-5702-4573-abb2-68abcd952dec
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ஊடகம்

‘லியோ’ படத்தின் ஆரம்பக் காட்சிகளை கட்டாயம் பாருங்கள் என்று அந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

விஜய், திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘லியோ’. வருகிற 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது. இதன் காரணமாக தற்போது இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள். முன்னதாகவே சென்று படத்தை ஆரம்பத்தில் இருந்து பாருங்கள்.

“மேலும் பல ஆயிரம் பேர் இதற்காக உழைத்திருக்கிறார்கள். அதனால் படம் தொடங்குவதற்கு முன்பு எப்படியாவது திரையரங்கிற்குள் சென்று அமர்ந்து விடுங்கள்,” என்று அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக படத்தின் தொடக்கத்தில் ஏதோ ஒரு முக்கிய காட்சி இருப்பதால்தான் இப்படி தங்களை எச்சரிக்கை செய்து உள்ளார் என்று கருதும் விஜய் ரசிகர்கள், “நீங்கள் சொன்னது போலவே படம் தொடங்குவதற்கு முன்கூட்டியே நாங்கள் திரையரங்கிற்குள் சென்று அமர்ந்து விடுவோம்,” என்று இணையத்தில் அவருக்கு பதில் தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்