வேதிகா: திருடிக் குடிப்பதுபோல் உள்ளது

வேதிகா: திருடிக் குடிப்பதுபோல் உள்ளது

1 mins read
3c1a59f3-aec9-456f-af36-394dbab170b7
வேதிகா. - படம்: ஊடகம்

பரதேசி படத்தில் நடித்திருக்கும் வேதிகா ஏன் பால் குடிப்பதில்லை என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து முனி, காளை, சக்கரகட்டி, காவியத்தலைவன், பரதேசி, காஞ்சனா -3 உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் வேதிகா நடித்து வருகிறார். மீண்டும் சினிமா இணையத் தொடர்களில் நடித்துவரும் வேதிகா அளித்த பேட்டியின்போது, “தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான படங்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

“நான் நடித்த ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களில் எனக்கு முதன்மை கதாபாத்திரம் கிடைத்தது. தமிழ் சினிமா இப்போது வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் உள்ளதால் மாறுபட்ட வேடங்களில் கதாநாயகிகள் நடித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

“தற்பொழுது ‘பேட்ட ராப்’ படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து வருகிறேன். ‘முனி 3’ என்ற பேய் படத்திலும் நடிக்கிறேன்.

“பேய் இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது. பேய் படம் பிடிக்கும். ஆனால் பேய் என்றால் பயப்படுவேன். நான் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். அதனால் அசைவம் சாப்பிடுவதில்லை.

“பால்கூட குடிப்பதில்லை. காரணம் கன்று குட்டி குடிக்க வேண்டிய பாலை திருடி நாம் குடிப்பதுபோல் உள்ளது. எனவே பால் குடிப்பதில்லை.

“தோல் செருப்பு கூட அணிய மாட்டேன். ஓ.டி.டி யில் நல்ல ஆழமான கருத்துள்ள படங்கள் வருகின்றன. நேரம் இருக்கும்போது இதுபோன்ற படங்களைப் பார்ப்பேன்,” என்று கூறினார் வேதிகா.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி