பாலியல் தொல்லைகள்: இனியா வருத்தம்

பாலியல் தொல்லைகள்: இனியா வருத்தம்

1 mins read
6fe1c68b-4a6c-45b7-b19b-392a8dbdde32
இனியா. - படம்: ஊடகம்

திரையுலகில் நடிக்க வந்த புதிதில், தாம் கருப்பாக இருப்பதாகக் கூறி சில வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக நடிகை இனியா கூறியுள்ளார்.

மேலும், பாலியல் ரீதியில் பல்வேறு தொல்லைகளை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் சிலர் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்துள்ளனர். இதுபோன்ற சிக்கல்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.

“அறை கதவை திறந்து வைத்து, ஒருவரை உள்ளே நுழையவிட்டு, பின்னர் அவர் எல்லை மீறிவிட்டார் என்று சொல்வது சரியல்ல. அப்போது நிகழும் அனைத்துக்கும் நாமே முழு பொறுப்பு.

“எனவே கதவைத் திறக்க வேண்டுமா, வேண்டாமா? என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும்,” என்று இனியா கூறியுள்ளார்.

‘வாகை சூடவா’, ‘மவுன குரு’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இனியா. தற்போது தமிழிலும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார் இனியா.