மாறுபட்ட தோற்றத்தில் வலம் வரும் விஜய் சேதுபதி

மாறுபட்ட தோற்றத்தில் வலம் வரும் விஜய் சேதுபதி

1 mins read
4f049e84-16a8-4d4d-b4b8-ffc011d7895b
விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

கடைத் திறப்பு விழா ஒன்றில் மாறுபட்ட தோற்றத்தில் விஜய் சேதுபதி கலந்துகொண்டது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணாடி அணிந்து அப்பாவி இளையரைப் போல் காட்சியளித்தார் விஜய் சேதுபதி.

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சேதுபதி இந்தத் தோற்றத்தில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை 2’ படத்தின் ‘பிளாஷ்பேக்’ பகுதியில் இதுதான் சேதுபதியின் தோற்றம் என இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் இரண்டாம் பாகம் தொடர்பாக ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்