தேசிய விருது பெற்ற திரைக் கலைஞர்கள்

தேசிய விருது பெற்ற திரைக் கலைஞர்கள்

படம்: ஊடகம்

18 Oct 2023 - 2:05 pm

1 mins read
நடிகர் மாதவன் விருது பெறும் காட்சி.
நடிகர் மாதவன் விருது பெறும் காட்சி. - படம்: ஊடகம்

69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு திரையுலகங்களைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்திய அதிபர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

‘புஷ்பா’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ஒரு நடிகர் இந்த விருதைப் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

தேசிய அளவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வு பெற்றுள்ளது ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இப்படத்தை இயக்கிய நடிகர் மாதவன் விருதைப் பெற்றுக் கொண்டார்.

ஆலியா பட், கிரித்தி சனோன் (சிறந்த நடிகை), ஸ்ரீகாந்த் தேவா (குறும்பட இசையமைப்பாளர்) உள்ளிட்டோர் விருது பெற்றனர். ‘கடைசி விவசாயி’க்கு கிடைத்த சிறந்த படத்துக்கான விருதை இயக்குநர் மணிகண்டன் பெற்றார். ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படத்திற்காக சிறந்த கல்வி திரைப்பட விருதை பி.லெனின் பெற்றுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்