தந்தை அஜித் இருசக்கர வாகனங்களில் உலகைச் சுற்றி வர, அவரது மகன் ஆத்விக் காற்பந்து திடலை வலம் வந்து அசத்துகிறார்.
‘குட்டி தல’ என அஜித் ரசிகர்களால் அழைக்கப்படும் ஆத்விக்குக்கு எட்டு வயதாகிறது. தீவிர காற்பந்து ரசிகர்.
பள்ளி அளவிலான காற்பந்து போட்டிகளில் பிரகாசித்து வரும் ஆத்விக், அண்மையில் ஒரு போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்காக அஸர்பைஜான் நாட்டில் உள்ள அஜித், இத்தகவலை அறிந்து, உடனடியாக மகனை தொடர்புகொண்டு பேசி வாழ்த்தி உள்ளார்.
இதற்கிடையே, ஆத்விக் காற்பந்து விளையாடும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

