சேலை தான் இந்திய கலாசாரத்தை முன்னிறுத்துகிறது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சேலை அணிந்து, கண்ணாடி முன்நின்று தன் அழகை தாமே ரசித்த நாள்கள் உண்டு என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“கடை திறப்பு விழாவிற்கு வரும்போது நிறைய சேலைகள் வாங்குவேன். சில சமயம் அம்மாவிடம் இருந்தும் சேலைகளைத் திருடிவிடுவேன்,” என்று நகைச்சுவையாகக் குறிப்பிடும் கீர்த்தி தற்போது ‘ரகு தத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘சைரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கைத்தறி புடவைகளின் விலையும் மதிப்பும் குறைந்து வருவது கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள கீர்த்தி, கைத்தறி ஆடைகளை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்திய கலாசாரம் அழிந்து வருவதை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

