ஷ்ருதி: பெண்களுடன் பணியாற்றியது அழகான அனுபவம்

ஷ்ருதி: பெண்களுடன் பணியாற்றியது அழகான அனுபவம்

1 mins read
8fdbc2c4-7880-4d54-95fe-3cfcdad7878f
ஷ்ருதி ஹாசன். - படம்: ஊக்கம்

தமக்கு அரசியல் ஆர்வம் அறவே இல்லை என்றும் எதிர்காலத்தில் அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்றும் ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தந்தை கமல்ஹாசனை வைத்து படம் இயக்குவது சாதாரண பணியல்ல என்றார்.

“அப்பாவுடன் என்னால் போட்டிபோட முடியாது. தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில், இந்தியப் பெண்ணாக நடித்துள்ளேன்.

“இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என அனைவருமே பெண்கள்தான். இதுபோன்ற குழுவுடன் பணியாற்றுவதை நினைத்தால் பெருமையாக உள்ளது. மேலும், அழகான அனுபவமாகவும் அமைந்துள்ளது,” என்று ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்