துரோகம் செய்த சிவா: சாடும் இசையமைப்பாளர்

துரோகம் செய்த சிவா: சாடும் இசையமைப்பாளர்

1 mins read
5ce34a7c-c10a-4038-aef5-0a04567fe036
சிவகார்த்திகேயனுடன் டி.இமான். - படம்: ஊடகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்தி பறவை’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஜென்மத்தில் தானும் சிவகார்த்திகேயனும் இனி இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் இதற்கு சிவா செய்த மிகப்பெரிய துரோகம்தான் காரணம் என்றும் கூறியுள்ளார் இமான்.

“அது என்னவென்று என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அது தனிப்பட்ட விஷயம்.

“இது நான் மிகவும் கவனமாக எடுத்த முடிவு. அவர் செய்த துரோகம் தாமதமாகத்தான் தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். அவர் கூறிய பதிலை என்னால் பகிர இயலாது,” என்று இமான் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனதால் சிவகார்த்திகேயன் மீது இமான் வீண்பழி சுமத்துவதாக அவரது முதல் மனைவி கூறியுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்