யோகி பாபு என்றாலே அவரது அடர்த்தியான, சுருண்ட, மாறுபட்ட சிகையலங்காரம்தான் முதலில் நினைவுக்கு வரும்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் தோனியுடன் விளம்பரப் படத்தில் இணைந்து நடிக்க தனது சிகையலங்காரத்தை மாற்றி உள்ளார்.
இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்தபோதும்கூட, சிகையலங்காரத்தை மாற்ற யோகி பாபு ஒப்புக்கொண்டதில்லை.
சில படங்களில் நன்றாக படிய சீவி நடித்திருப்பாரே தவிர தலைமுடியை குறைக்க மறுத்துவிடுவார்.
ஆனால் தோனிக்காக தனது கொள்கையைத் தளர்த்தி உள்ளதாக யோகி குறிப்பிட்டுள்ளார்.
“எனது கதாநாயகனும் முன்மாதிரியுமான கேப்டன் தோனியுடன் விளம்பரப் படம். இது எனக்கு உணர்ச்சி மிகுந்த தருணம். தோனி, உங்களுக்கு தலைவணங்குகிறேன்,” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் யோகி பாபு.