ஏறக்குறைய 64 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக ஊடகங்களில் இயங்கத் தொடங்கி உள்ளார் லட்சுமி மேனன்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டகிராமில் கடைசியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு எந்தப் பதிவும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், சேலை அணிந்து காட்சியளிக்கும் புதுப்படம் ஒன்றை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் லட்சுமி.
இதைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்ததாகவும் மீண்டும் சமூக ஊடகங்களில் இயங்க வாழ்த்துவதாகவும் அவரது ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக லட்சுமிக்கு பெரிய வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்துக்குப் பிறகு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.
எனவே, ரசிகர்களுடனான உறவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளாராம்.

