செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி இறந்ததை அடுத்து துக்கத்தில் உள்ளார் ஹன்சிகா மோத்வானி.
இவருக்கு செல்லப் பிராணிகள் மீது மிகுந்த பாசம் உண்டு. வீட்டில் நான்கைந்து நாய்க் குட்டிகளை வளர்த்து வருகிறார்.
அவற்றுள் புருஸோ என்ற நாய்க்குட்டி அண்மையில் இறந்துவிட்டது. இதையடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர், புருஸோவை பெற்ற மகனைப் போல் பாசம் காட்டி வளர்த்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“என் மகனைப் போல் இருந்தாய். உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது,” என்று தெரிவிந்துள்ள ஹன்சிகா, ஆதரவற்ற பல குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார்.
அக்குழந்தைகளுக்கான தங்கும் இடம், உணவு, கல்வி என அனைத்துக்கும் அவரே பொறுப்பேற்றுள்ளார்.
அண்மைக்காலமாக செல்லப் பிராணிகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஹன்சிகா.