சிகிச்சைக்காக உணவுப் பழக்கத்தை மாற்றிய சமந்தா

1 mins read
2b4283ed-596a-4745-b02d-485369f797d9
சமந்தா. - படம்: ஊடகம்

உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தனது உணவுப் பழக்கத்தை அடியோடு மாற்றி அமைத்துள்ளார் சமந்தா.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சமந்தா, திரைப்படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில், தனக்குள்ள நோயை மேலும் தீவிரப்படுத்தும் உணவு வகைகள், காய்கறிகளை அறவே தவிர்க்கிறாராம்.

குறிப்பாக உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டை, பால் பொருள்கள் ஆகியவற்றை அறவே ஒதுக்கிவிடுகிறார்.

“எனக்கு ரொட்டி மிகவும் பிடிக்கும். அதைக்கூட கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடவில்லை. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அண்மையில்தான் ரொட்டி சாப்பிட்டேன். நோயை வெற்றிகொள்ள உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்,” என்று அறிவுறுத்துகிறார் சமந்தா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்