25வது படம்: 25,000 பேருக்கு அன்னதானம்

25வது படம்: 25,000 பேருக்கு அன்னதானம்

1 mins read
82142459-7bec-4318-be69-fa046f3eab7a
‘ஜப்பான்’ படத்தில் கார்த்தி. - படம்: கார்த்தி

ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இது அவரது 25வது படம் ஆகும்.

திபாவளி பண்டிகையின்போது இப்படம் திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜப்பான்’ படத்தில் கார்த்தியின் தோற்றம் மாறுபட்டதாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமது 25வது படம் வெளியாவதைக் கொண்டாடும் வகையில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க கார்த்தி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவரது ரசிகர்கள் செய்துள்ளனர். ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதற்குப் பதிலாக, தினமும் ஆயிரம் பேர் வீதம் தொடர்ந்து 25 நாள்கள் உணவு வழங்கத் திட்டமிமடப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இலவச உணவை ஒரு வாகனத்தில் தெருத்தெருவாகக் கொண்டு சென்று, ஏழைகளுக்கு விநியோகித்து வருவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்